Connect with us

தொடரும் மீரா மிதுன் – சேரன் சண்டை

Entertainment

தொடரும் மீரா மிதுன் – சேரன் சண்டை

பிக் பாஸ் 5 ஆம் நாளன்று ‘லாஃபிங் தெரபி’ சொல்லிக் கொடுக்கும்படி பிக்பாஸ்டம் இருந்து ஃபாத்திமா பாபுவுக்கு கட்டளை வருகிறது.

அதனை, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மகிழ்ச்சியுடன் செய்து முடிக்கிறார்கள். பின்னர் லக்ஸ்ரி பட்ஜெட் டாஸ்க்காக வனிதா தன்னுடைய மறக்க முடியாத நாள் குறித்து பேசினார்.

பின்னர் கவினும், தனக்கு துன்பத்தில் தோள் கொடுத்தவர் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கஷ்டத்தில் இருக்கும் போது, உறவினர்கள் யாரும் உதவாமல் ஒதுக்கியது பற்றி கூறி வருத்தப்பட்டார் கவின்.

9c2865f4e3c3f47ecd41f8ce7866c555

இது அனைத்தும் ஒருபுறம் இருக்க பாத்திரம் கழுவ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சாண்டியை செய்ய விடுகிறார் மீரா. இதனைப் பெரும் பிரச்சினையாக மோகன் வைத்யா, வனிதா, பாத்திமா பாபு, ரேஷ்மா ஆகியோர் பேசுகின்றனர். இதனால் மீராவுக்கும் வனிதாவுக்கும் சண்டை தலைக்கேறியது. தன்னை எப்போதுமே இங்குள்ளவர்கள் அழ வைக்கிறார்கள் என அழுகிறார் மீரா.

வனிதாவை சமாதானம் செய்ய மதுமிதா முயலும்போது யாரும் எதுவும் பேசாதீர்கள் என கோபமாக சேரன் கூறுகிறார். இது அன்றே முடிந்த பிரச்சினை என்று எண்ணியிருந்தவர்களுக்கு மற்றொரு ஷாக்!!  மீரா மிதுனுக்கும் சேரனுக்குமான முரண்பாடுதான்!

நேற்று பல்வேறு பிரச்சினைகள் நடந்து முடிந்த நிலையிலும் இதற்கு ஒரு தீர்வு வந்தபாடில்லை. மீரா மிதுன் சேரனிடம் வலியப் போய் பேசினாலும் அவர் பேசத் தயாராக இல்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top