Entertainment
நடிகை கவுதமியின் பிறந்த நாள் இன்று
கடந்த 1983ல் வசந்தமே வருக என்ற படத்தில் அறிமுகமானவர் கெளதமி. முதல் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை இதனால் மற்ற மொழிகளில் நடித்து வந்தார். அதன் பிறகு 5 வருடம் கழித்து ரஜினியுடன் இவர் நடித்த குரு சிஷ்யன் படம் இவருக்கு நல்லதொரு பெயரை கொடுத்தது.

அதன் பின் முன்னணி நடிகையான கெளதமி ராமராஜன், கமல்ஹாசன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் அதிகப்படியாக நடித்திருப்பார். அப்போதைய பிரபு, கமல், ரஜினி, கார்த்தி, சத்யராஜ் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்தவர் கவுதமி.
அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், ஊரு விட்டு ஊருவந்து, உலகம் பிறந்தது எனக்காக, ராஜா சின்ன ரோஜா,ராஜா ராஜாதான், சின்னக்கண்ணம்மா என பல்வேறு வகையான படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கெளதமி.
தமிழின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் விளங்கிய கெளதமியின் பிறந்த நாள் இன்று.
