Connect with us

பிக்பாஸ் வீட்டின் வெளியே வனிதாவை கைது செய்ய காத்திருக்கும் தெலுங்கானா காவல்துறை

Entertainment

பிக்பாஸ் வீட்டின் வெளியே வனிதாவை கைது செய்ய காத்திருக்கும் தெலுங்கானா காவல்துறை

சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் டிவி நடிகர் ஆகாஷை மணந்து மணமுறிவு பெற்றார். அதன் பின் தொழிலதிபர் ஆனந்தராஜை மணந்து அவரிடமும் மணமுறிவு பெற்றார். பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் இணைந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

7d3bb0f6d2155e5c36bda3096a2967a0

தினமும் தன் தந்தையான விஜயகுமாருடன், சகோதரர் அருண் விஜய்யுடனும் தொடர்ந்து தகராறு செய்து வந்தவர் வனிதா. சொத்து பிரச்சினைக்காக தந்தை விஜயகுமார் வீட்டு முன்பு தர்ணா செய்து தந்தை விஜயகுமாரை பற்றி பயங்கர குற்றச்சாட்டுக்களை கூறியவர் இவர்.

இப்படி சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார்.

இவர் தனது இரண்டாவது கணவரான ஆனந்தராஜுக்கு பிறந்த குழந்தையை கடத்தி விட்டதாக அவரது இரண்டாவது கணவர் தெலுங்கானா மாநில போலீசில் கொடுத்த புகார் காரணமாக சென்னையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் தெலுங்கானா மாநில போலீசார் வனிதாவை கைது செய்ய காத்துக்கிடக்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வனிதாவை கைது செய்ய போலிசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top