Entertainment
லோஸ்லியாவை டார்க்கெட் செய்யும் அபிராமி… கடுப்பான ரசிகர்கள்!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது முதலே நாட்டின் மொத்த சண்டையையும் போட்டியாளர்களே போட்டுவிடுகின்றனர். மீரா வரும் வரை கலகலப்பாக சென்றது.
15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீரா மிதுன் நுழைந்ததுதான் நுழைந்தார் அப்படி வெச்சு வெச்சு செய்றாங்க. ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட பிரச்சினைகளை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டுவந்து சாக்சியுடன் சேர்ந்து கொண்டு அவரை டார்க்கெட் செய்தார் வந்தார் அபிராமி.
ஒரு கட்டத்தில் அவர்களது பிரச்சினை சமரசமான நிலையில், வாயை வெச்சுக்கிட்டு சும்மா இராமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் மதுமிதா.

சாதாரணமாக மதுமிதா சொன்ன விஷயங்கள் கலாச்சார சீரழிவு வரைக்கும் வந்துவிட்டது. மதுமிதாவை ஒவ்வொரு நிமிடமும் அபிராமி, சாக்ஷி அகர்வால், ஷெரின் வெச்சு செய்றாங்க. இந்த 3 பேரை கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த மூணு பேரின் மொத்த உருவமா இருக்க வனிதாவை சமாளிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.
மீராவை வெச்சு செஞ்சு முடிச்சுட்டு, அடுத்து மதுமிதாவை முடிச்சு கட்டிட்டு
இதுவரைக்கும் ஜாலியாக, ஆட்டம், பாட்டம் என்றும், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவருமான லோஸ்லியா தான். யாரைப் பற்றியும் எதுவும் பேசமாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தவர்.
இப்போ தெரியாமல் அபிராமி கண்ணில் பட்டுட்டார். இனி, அவர் தான் கார்னர் செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. லோஸ்லியாவை பகைச்சுகிட்டீங்க இல்ல? இனி அவ்ளோதான் ரசிகர்கள் உங்களை வெச்சு வெச்சு செய்வாங்க போங்க.. l
