Connect with us

கவினின் தொடரும் லீலைகள்!! கடுப்பான முரட்டு சிங்கிள்ஸ்

Entertainment

கவினின் தொடரும் லீலைகள்!! கடுப்பான முரட்டு சிங்கிள்ஸ்

பிக்பாஸ் 1 இல் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய ஒரு விஷயம் ஆரவ் ஓவியா காதல், அதைப் போலவே பிக்பாஸ் 3 இல் காதல் ஜோடிகள் உலா வருகின்றன. வந்த 2 ஆம் நாளே காதல், இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சிதான் என்றாலும் விறுவிறுப்பினை கூட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

அபிராமியிடமிருந்து விலகிய கவின் சாக்ஷியிடம் நட்புக் கொண்டார், மூன்று நாட்கள் முன்பு ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கவின் மீது கிரஷ் இருப்பதாக ஷெரினிடம் கூறினார். பின்னர் அந்த க்ரெஷ் பிக் பாஸ் வீட்டில் காதலாக மாறி உள்ளது. ஆமாங்க, ப்ரோமோவில் சாக்ஷி கவினிடம் காதலைப் பற்றி ஏதோ பேசுகிறார், அதனை ஆமோதிக்கும்விதமாக கவின் பதிலளிக்கிறார்.

4f2050614245fb72daafb16d1b94e975

 மூன்று நாட்கள் மட்டுமே தொடர்ந்த காதல் தற்போது ப்ரேக் அப் ஆகிவிட்டது. நேற்றைய எபிஸோடில், மதுமிதாவுக்கு இருக்கும் ஆதரைப் பார்த்த கவின், தேவையில்லாம அபிராமிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் எதிர்பார்ப்பினை சம்பாதித்துக் கொண்டோமோ என்று எண்ணுவது போல் காட்டப்பட்டிருக்கும்.

அதனைத் தொடர்ந்து இன்றைய ப்ரோமோவில் கவின் சாக்ஷியை விட்டு விலகி லாஸ்லியாவுடன் இருப்பது போன்றும், அதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை போன்றும் காட்டப்பட்டிருக்கும்.

ஓவியா இடத்தை ரசிகர்கள் மத்தியில் வலுவாகப் பிடித்துள்ள லாஸ்லியா, கவினிடம் மாட்ட வாய்ப்பில்லை என்பதோடு, இவரின் லீலைகளைக் கண்டு கடுப்பாகிவிட்டனர் நம்ம முரட்டு சிங்கிள்ஸ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top