Entertainment
சர்ச்சைக்குள்ளாகும் சமுத்திரக்கனியின் வடநாட்டுசாமி தென்னாட்டுசாமி பேச்சு
சமுத்திரக்கனி நடிக்கும் கொளஞ்சி படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை தயாரித்திருப்பவர் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன். இவர் ஒரு பெரியாரிய சிந்தனைவாதி.

படத்தில் சமுத்திரக்கனி ஒரு வசனத்தில் காவி வேட்டி கட்டி இருக்கும் ஒருவரை பார்த்து சொல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி இருக்கிறது.
சாஸ்திரம் எழுதுனவன் வீட்டுக்குள்ள உன்ன விடுவானா அவனுக்கு நீ கீழ்ஜாதி, நம்ம சாமி எல்லாம் ஊருக்கு வெளிய வச்சிட்டு வடக்கத்தான் கொண்டு வந்த சாமியத்தான் நீங்க ஊருக்குள்ள வச்சிருக்கிங்க என சமுத்திரக்கனி பேசியுள்ளார்.
இது போல வசனங்களால் சமுத்திரக்கனிக்கு ஒரு பக்கம் ஆதரவு கருத்துக்களும் ஒரு பக்கம் எதிர்ப்பு கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன.
