Entertainment
கொளஞ்சி புதிய டிரெய்லர்
சமுத்திரக்கனி நடித்துள்ள படம் கொளஞ்சி. நீண்ட இடைவேளைக்கு பிறகு சங்கவி இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். புரட்சி பேசும் சமுத்திரக்கனியின் வழக்கமான படங்கள் போலவே இது இருக்கும் என தெரிகிறது.

இவர் இயக்கிய நிமிர்ந்து நில் போன்ற அதிரடி படமாக இருந்தாலும் அதில் ஊழலுக்கு எதிரான புரட்சி கருத்துக்களும், அப்பா போன்ற படங்களில் கல்விக்கு எதிரான புரட்சி கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்த படமும் அப்படியான கருத்துக்களை தாங்கித்தான் வருகிறது என டிரெய்லரை பார்த்தே அறிந்து கொள்ளலாம்.
மூடர் கூடம் படத்தை தயாரித்த நிறுவனமே இப்படத்தை தயாரித்துள்ளது. தனராம் சரவணன் இயக்கியுள்ளார்.
இதற்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இருந்தாலும் இது இந்த படத்தின் இன்னொரு டிரெய்லர் ஆகும்.
