Entertainment
மதுமிதாவிடம் முத்தம் கேட்ட மைனர் சரவணன்..!!
இரண்டு கிராமமாக பிரிந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில், போட்டியாளர்களுக்கு இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவுக்கு இடையில் பெரும் சண்டை ஏற்பட்டது, அதனால் விடே இரண்டானது.
மதுமிதா கத்தியது பிக் பாஸ் வீடே இடிந்துவிழும் அளவு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக பல பிரச்சினைகள் எழுந்தாலும், வீடு அவ்வப்போது டாஸ்க்கால் கலகலப்பாகவே இருந்தது.

கீரிப்பட்டி என்ற ஊரின் தலைவராக இருக்கும் மதுமிதாவிற்கு மீராவிற்கும் இடையே யார் பெரியவர் என்று ஒரு பிரச்சினை கிளம்பி, அதனால் இவருக்குமிடையில் விவாதம் எழுகிறது.
பிரச்னை வெடிக்க ஆரம்பிக்கயில், நீங்கள் போய் பழத்தை எடுத்து சாப்பிடுங்கள் என்று அபிராமிக்கு கட்டளை இட்டதுடன், அதற்கு சன்மானமாக முத்தம் கேட்கிறார்.
அபிராமியும் முத்தம் கொடுத்துவிட்டு பழம் பெற்றுக்கொள்கிறார்.
இதை பார்க்கும் சரவணன், தனக்கு பழம் வேணும் அதனால் முத்தம் தரவா என்று மதுமிதாவிடம் கேட்கிறார். இதை எதிர்பார்க்காத மதுமிதா, சரவணனை பார்த்ததும் தெறித்து ஓடுகிறார். இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாகி விடுகிறது. அதுவரை சண்டைப் போட்டுக்கொண்டு இருந்த மதுமிதாவும், மீராவும் சகஜமாகிவிட்டனர்.
