Entertainment
மதுமிதா மீது கடுப்பான சாண்டி ரசிகர்கள்!
பிக் பாஸ் வீட்டில் 5 வது வாரம் மோகன் வைத்யா வெளியேறியதைத் தொடர்ந்து, கலகலப்பாகவே இருந்தது. அவரைப் போல சாண்டி செய்து காண்பித்து அனைவரையும் கலகலப்பாக்கினார். இதேபோல் எப்போதும் வீட்டை கலகலப்பாக வைத்திருக்கும் பெருமை சாண்டியையே சாரும்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக புதுவிதமான போட்டி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..

டாஸ்கில் சாண்டி மதுமிதாவுக்கு டாஸ்க் வழங்கினார். அதை மதுமிதா செய்து கொண்டிருந்த போது வழக்கம் போல அவரை கேலி செய்தார் சாண்டி. இதில் ஆத்திரமடைந்த மதுமிதா, சாண்டியுடன் சண்டைக்குச் சென்றுவிட்டார்.
யார் சமாதானம் செய்தாலும் மதுவால் கோபத்தை அடக்க முடியவில்லை. கத்தி கத்தி வீட்டை ஒருவழி ஆக்கிவிட்டார். கவின் சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர் சமாதானம் அடையவில்லை. தொடர்ந்து நடந்ததையே பேசிக்கொண்டிருந்தார்.
மதுவின் நடவடிக்கை குறித்து வீட்டுக்கு வெளியில் கவலை தெரிவித்துக்கொண்டிருந்தார் சாண்டி. அவரை மீரா, சாண்டி, சரவணன் ஆகியோர் சமாதானம் செய்து வந்தனர். இப்படியே மது நடந்து கொண்டிருந்தால் அவருடன் யாரும் பேச மாட்டார்கள் என சாண்டி வருத்தம் தெரிவித்தார்.
மது அமைதியான பிறகு, சாண்டியும் கவினும் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அப்போது பேசிய மது, மற்றவர்களை கேலி செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த நபர்களை கேளி செய்யக்கூடாது என்று கூறினார். எனினும், மதுவின் சினம் தணியவும் இல்லை, இவ்வளவு கோபமாக கத்தியதால் மக்கள் சற்று அதிர்ச்சியே அடைந்துள்ளனர்.
சாண்டியின் ரசிகர்கள் மதுமிதா மீது கோபமாகவே இருந்து வருகின்றனர், இதனால் இவர் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
