Entertainment
சேரன்மேல் பழி போட்ட மீரா மிதுன்!!!
இந்த வார லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டில், போட்டியாளர்கள் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாம்புப்பட்டி கிராமத்தின் நாட்டமையாக இருக்கும் சேரன், தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார். இதனால் அவருக்கும் ஒருசிலருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

குறிப்பாக ரேஷ்மா, சேரன் தன்னிடம் கத்தி பேசிவிட்டார் என்று அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். இதனால் சேரன் சற்று மனமுடைந்து போனது நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
அதை தொடர்ந்து மதுவுக்கும், சாண்டிக்கும் நடந்த சண்டையில் சமாதானம் செய்ய முயன்ற சாக்ஷியும், சேரனிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
ஹாலில் டாஸ்க்கின்போது சேரன் நடந்துகொண்டவிதம் பிடிக்கவில்லை என்றார், தன்னை அவர் கையாண்டவிதம் தவறானது என்று கூறினார். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறுகிறார். தொடர்ந்து இனிமேல் பிக்பாஸ் வீட்டில் தான் வேறொரு ஆள். இனிமேல் யாரிடமும் பேசப்போவதில்லை என்று தெரிவிக்கிறார்.
மீரா சேரன் மீது போட்ட பழியால் அவர்மீது களங்கம் ஏற்பட்டதாக கருதி கதறினார் சேரன்.
