Connect with us

என்னை வெளியே அனுப்புங்கள் -கதறிய சேரன்!!!

Entertainment

என்னை வெளியே அனுப்புங்கள் -கதறிய சேரன்!!!

இந்த வார லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டில், போட்டியாளர்கள் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். 

இதில் பாம்புப்பட்டி கிராமத்தின் நாட்டமையாக இருக்கும் சேரன், தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார். இதனால் அவருக்கும் ஒருசிலருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 

குறிப்பாக ரேஷ்மா, சேரன் தன்னிடம் கத்தி பேசிவிட்டார் என்று அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். இதனால் சேரன் சற்று மனமுடைந்து போனது நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. 

f488b29a5385072c472d9bcfef78fb71

அதை தொடர்ந்து மதுவுக்கும், சாண்டிக்கும் நடந்த சண்டையில் சமாதானம் செய்ய முயன்ற சாக்‌ஷியும், சேரனிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 

தொடர்ந்து போட்டியாளர்களிடம் ஏற்பட்டு வந்த இந்த மனோபாவத்தால் மிகவும் சோகமடைந்தார் சேரன். இந்நிலையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடைபெறுகிறது. 

ஹாலில் மீரா மிதுன் போட்ட பழியால் மனமுடைந்த சேரன், எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறுகிறார். தொடர்ந்து இனிமேல் பிக்பாஸ் வீட்டில் தான் வேறொரு ஆள். இனிமேல் யாரிடமும் பேசப்போவதில்லை என்றும் தெரிவித்தார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top