Connect with us

முதல் முறையாக சேரனுக்காக பரிந்து பேசிய சித்தப்பு

Entertainment

முதல் முறையாக சேரனுக்காக பரிந்து பேசிய சித்தப்பு

நேற்றைய டாஸ்க்கின்போது லோஸ்லியா ஒரு பொருளை திருடினார். அதை கையும் களவுமாக சேரன் பிடித்துவிட்டார். அப்போது லோஸ்லியா வைத்திருக்கும் பொருளை காப்பாற்ற மீரா முயற்சித்தார். இதை தடுக்க சேரன் உடனே மீராவை பிடித்து இழுத்து அந்த புறமாக போட்டார். 

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேச முன்வந்தார் மீரா. அதில் சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறினார். 

459bacedebadc5dbf05e8751687e1482

இந்த குற்றச்சாட்டு பிக்பாஸ் வீட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த சேரன் தன்னுடைய கட்டிலில் அமர்ந்து அழ தொடங்கிவிட்டார். உடனே பிக்பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார். 

இதற்கிடையில் சந்திப்புக் கூடத்தில் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த மீரா, தொடர்ந்து சேரனை குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தார். இதுதொடர்பாக அவர் விளக்கம் தர முயன்றும் மீரா கேட்டுக்கொள்ள முயற்சிக்கவில்லை. 

அவரும் பொறுமையாக இந்த மாதிரி நீ என்மேல் பழி போட்டு இருந்தாலும் எனக்கு பகீரென ஆகியிருக்கும். அவருக்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்ததில்லை. ஆனால் இந்த விஷயத்தில் அவர் மேல் நீ புகார் சொன்னவிதம் தவறு என்று அறிவுரை கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top