Entertainment
இளையராஜாவுக்கு இன்று டாக்டர் பட்டம்
இசைஞானி இளையராஜா இசைத்துறையில் செய்யாத சாதனையே இல்லை. இயற்கையான இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி தற்போது இருப்பது போல் கணிணி எதையும் பயன்படுத்தாமல் இனிமையான இசையை கொடுத்தவர் இளையராஜா.

பாடல்களை போல் பின்னணி இசையை இவர் அளவுக்கு சிறப்பாக திரைப்படங்களில் கையாண்டதில்லை எனலாம்.
இளையராஜாவின் இசை சாதனைக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இது வரை நான்கு இடங்களில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆந்திராவில் குண்டூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று மாலை நடைபெறும் விழாவில் டாக்டர் பட்டம் அளித்து கெளரவிக்கிறது.
இது இவருக்கு 5வது டாக்டர் பட்டம் ஆகும்.
