Entertainment
கிராம மக்கள் மனதை மாற்றிய தேவர் மகன் – சீமான் நெகிழ்ச்சி
சீமான் ஒரு விழாவில் சமீபத்தில் பேசியபோது தான் இயக்குனராக பணிபுரிந்த பாரதிராஜா படங்கள் பற்றி கூறியுள்ளார். எங்கப்பா பாரதிராஜா படமான கிழக்கு சீமையிலே முடிச்சிட்டு கருத்தம்மா படம் எடுத்துக்கிட்டு இருக்கோம். அப்போ ஒரு கிராமத்துல ஊர்ல பாதிப்பேர் ஷூட்டிங் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

அப்போ அந்த ஊர்லருந்து சில பேர் கத்தி, அரிவாள், கம்புகளோட போய்க்கிட்டு இருக்காங்க. நாங்க புரிஞ்சுக்கிட்டோம் பக்கத்து ஊர்ல ஏதோ ஜாதி ரீதியான சண்டைனு தெரிஞ்சுக்கிட்டு ஷூட்டிங் பார்க்கறவங்க கிட்ட கேட்குறோம் ஏங்க நீங்கலாம் போகலயானு கேட்குறோம். இல்லங்க நாங்க இந்த தேவர் மகன் படம் வந்ததுல இருந்து வெட்கப்பட்டுக்கிட்டு போறது இல்லங்க. என சிலர் கூறினார்கள்.
அப்போ பார்த்துக்கொள்ளுங்கள் ஒரு திரைப்படத்தில் ஒரு திரைக்கதையின் வலிமை ஜாதிச்சண்டையை எல்லாம் எப்படி நிறுத்தி இருக்குனு பார்த்துக்கோங்க.
நான் குடுத்த பால் எல்லாம் ரத்தமா ஓடுதேன்னு அதுல ஒரு ஆத்தா தூக்கி வச்சுக்கிட்டு கதறுமே அது போல ஒரு காட்சி போதும் என சீமான் கூறியுள்ளார்.
