News
எம்.எல்.ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்த காங்கிரஸ் பிரமுகர்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மற்ற கட்சிக்க்கு மாறி வரும் நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கட்சியில் இருந்தும், எம்.எல்.ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏவாகவும், அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர் ஜோகேஷ் சிங். இவர் இன்று தனது கட்சியின் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
ஜோகேஷ் சிங் விரைவில் இன்னொரு பிரபல கட்சியில் சேரவிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
