News
மோட்டார் சைக்கிளை அயர்ன் வண்டியாக மாற்றிய இளைஞர்

இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் இருந்து வரும் நிலையில் பல இளைஞர்கள் தற்போது சொந்த தொழில் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் சில இளைஞர்கள் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து தொழிலை அமைத்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய மோட்டார் சைக்கிளையே அயர்ன் செய்யும் வண்டிபோல் மாற்றியுள்ளார். மேலும் தன்னுடைய மொபைல் போன் எண்ணை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கொடுத்து தேவைப்படும்போது போன் செய்யுமாறூ கேட்டுக்கொண்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலம் அழைப்பு விடுத்தவுடன் அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் தனது மோட்டார் சைக்கிள் அயர்ன் வண்டியுடன் சென்று வாடிக்கையாளரின் துணிகளை அயர்ன் செய்து தருகிறார். இந்த சேவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால் அவருக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.
