Connect with us

முதலமைச்சர் கார் மீது பைக் மோதி விபத்து: ஒருவர் கைது

செய்திகள்

முதலமைச்சர் கார் மீது பைக் மோதி விபத்து: ஒருவர் கைது

cdf7530e0b9a929fb5ce16384194a89d

மேற்குவங்க மாநிலத்திற்கு வருகை தந்திருந்த திரிபுரா முதலமைச்சரின் காரின் மீது மர்ம நபர் ஒருவர் பைக்கால் மோதிய விபத்தில் பைக்கில் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திரிபுரா முதலமைச்சர் கார் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே வந்த ஒரு பைக் முதல்வரின் காரின் மீது மோதியது. இதனால் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து பைக்கில் வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்தில் முதல்வர் உள்பட யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது முதல்வரை தாக்க செய்யப்பட்ட சதியா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top