Entertainment
சேரனிடம் பேசாமல் காயப்படுத்தும் லோஸ்லியா!
விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான பிக் பாஸ் ஹோட்டலுக்கு வனிதா விருந்தினராக வந்திருந்தார். வந்த அன்றே அபிராமி, முகின் பிரச்சினையை பேசி முடிவுக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் மதுமிதாவிடம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று கூற, மதுமிதாவும் அதனை ஆண்களிடம் கேட்டு பெரும் பிரச்சினை ஆனது.

அப்போது ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணிய லோஸ்லியா, அமைதியாக இருந்த சேரனை காதலன் கவினுடன் சேர்ந்துகொண்டு பகைத்துக் கொண்டார்.
அவர்கள் பிரச்சினை முடிந்த கவினும் சாண்டியும் சேரன், மதுமிதா மற்றும் வனிதாவை கலாய்த்தனர். லோஸ்லியாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரித்தார்.
அந்தப் பிரச்சினைக்குப் பின் சேரன் அவ்வளவாக யாரிடமும் வைத்துக் கொள்ளவில்லை. கவின், சாண்டி, முகின், தர்ஷன் என அனைவரையும் வாங்க, போங்க, சார் என்று அழைத்தார் சேரன்.
இதை நான்கு பேரும் லாஸ்லியாவிடம் சொல்லி சிரித்தனர், காதலன் கவினுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக லோஸ்லியா சேரனுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் சேரன் லோஸ்லியா மீது கொண்ட பாசத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுபோல வருத்தத்துடன் மதுமிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
