Entertainment
ஊரையே சூறையாடிய காஞ்சிபுரம் கஞ்சா கும்பல்- அப்பாவி கொலை பதற்றம்
காஞ்சிபுரம் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்தவன் ரவுடி புருஷோத்தமன் இவன் மீது அடிதடி கஞ்சா வழக்கு என பல்வேறு விதமான வழக்குகள் இருந்துள்ளன. இருப்பினும் போலீசார் இவன் மீது போதிய நடவடிக்க்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இவன் நேற்று முன் தினம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த அந்த ஊர் பெரிய மனிதர் என அழைக்க கூடிய மகாதேவன் வீட்டு முன் தகராறு செய்துள்ளான். அதை தட்டிக்கேட்ட மகாதேவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். அவரிடம் இருந்த 3லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் மகாதேவன் போலீசும் ஒப்புக்காக நான்கு போலீசை அனுப்பி விசாரித்து விட்டு ஒரே ஒரு காவலரை பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் மகாதேவன் வீட்டுக்கு வந்த புருஷோத்தமன் அவரை மிரட்டியுள்ளான். அப்போது இதை தட்டி கேட்ட அவரது தம்பி தனஞ்செழியன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளான் இதில் அவர் துடிதுடித்துஇறந்து போனார் இவர் அருகில் மளிகை கடை நடத்தி வந்திருக்கிறார்.
உடனே ரவுடி புருஷோத்தமனின் ரவுடி கும்பல் பைக்கிலேயே அரக்கோணம் வரை சென்றுள்ளனர். செல்லும் வழியில் வழியில் பார்த்தவர்களிடம் எல்லாம் வம்பிழுத்து அடித்து உதைத்து சென்றுள்ளனர். கடும் கஞ்சா போதையில் இருந்த இவர்கள் தேவகி என்பவர் வீட்டில் இருந்த சிசி டிவி கேமராவை உடைத்து அந்த பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
ஊரில் உள்ள வீடுகளை அடித்து சென்றுள்ளனர்.
ரவுடி புருஷோத்தமன் ஏற்கனவே கோவிந்தவாடி பகுதியில் ரியல் எஸ்டேட் பகுதியை பராமரித்து கொண்டிருந்த ரவி என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் ஊர் பெரிய மனிதர் மகாதேவனிடம் புகார் கூறியுள்ளார். மகாதேவன் போலீசிடம் கூற போலீஸ் வழக்கு பதிந்து கோர்ட் வரை சென்றது.
மகாதேவனால் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறி மகாதேவனிடம் வன்முறையில் ஈடுபட்டுள்ளான் புருஷோத்தமன்.
அதை தொடர்ந்து கொலையையும் செய்து விட்டு காஞ்சிபுரம் பகுதியில் இருந்து அரக்கோணம் வரை கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கி சென்றுள்ளான்.
இது போல கொடூர ரவுடிகளை களையெடுப்பது எப்போது.
