News
மீண்டும் வரும் பிளாஸ்டிக் பைகள்
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. சாப்பிடும் இலையில் இருந்து எந்த ஒரு பொருள் வாங்கினாலும் பிளாஸ்டிக் கேரி பைகள் கொடுப்பதும். ஹோட்டல்களில் சாம்பார், சட்னி, கூட்டு, பொறியல் என அனைத்திற்கும் பிளாஸ்டிக் பை.

பஸ் ஸ்டாண்டில் பழம் வாங்கினாலும் பூ வாங்கினாலும் ஒரு காலத்தில் இலையில் கட்டியது போய் பிளாஸ்டிக் கைகளில் கொடுத்து வந்தனர்.
இது எல்லா இடத்திலும் அதிகமாகி கிராமங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என எல்லாவற்றிலும் பிளாஸ்டி பை இல்லாமல் பொருள் கொடுப்பது இல்லை என்ற நிலை உருவானது.
ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உட்பட பல சுற்றுலாத்தலங்களில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. காரணம் என்னவெனில் சுற்றுலா தலங்களுக்கு டூர் வருபவர்கள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதும். அவற்றை தூக்கி வீசி விட்டு வருவதுமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நல்ல முறையில் செயல்பட்ட அதிகாரிகளால் வாழை இலை உற்பத்தி அதிகமானது.
எல்லா இடத்திலும் பலர் மஞ்சள் துணிப்பை எடுத்துக்கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் பிளாஸ்டிக் பை மீண்டும் மெல்ல மெல்ல ஆக்ரமித்துக்கொண்டு வருகிறது.
பல கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாய் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் அழித்தொழிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எண்ணமாய் உள்ளது.
