Entertainment
கோமாளி வசூலில் முந்துகிறதா
ஜெயம் ரவி நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கோமாளி. இதற்கு பின்பு நிறைய திரைப்படங்கள் வெளிவந்து விட்டாலும், கோமாளி வெளியிட்ட பல தியேட்டர்களில் அப்படம் எடுக்கப்பட்டு அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

கோமாளி படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணமும் சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் படம் வருவதற்கு முன் சூப்பர் ஸ்டார் பற்றி காமெடி செய்து அது சர்ச்சையாகி நீக்கப்பட்டது.
இந்த ஒரு காரணத்துக்காக படம் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இப்படத்தின் வசூல் ரூ 35 கோடியை நெருங்கி வருகின்றது, ஜெயம் ரவி திரைப்பயணத்தில் வசூலில் தற்போதே இப்படம் தனி ஒருவனுக்கு அடுத்த இடத்திற்கு தற்போது வந்துவிட்டது என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
