Connect with us

அத்திவரதர் தரிசனம் வரவேண்டாம் என கலெக்டர் சொன்னதால் தொடரும் கண்டனங்கள்

News

அத்திவரதர் தரிசனம் வரவேண்டாம் என கலெக்டர் சொன்னதால் தொடரும் கண்டனங்கள்

அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு இந்த நிகழ்வுக்கு நாளுக்கு நாள் கூட்டம் குவிந்து வருகிறது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. நான்கு மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் இது சமாளிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

1188ce7e45fb14059c09778fb030abf8

இரண்டு தினங்களுக்கு முன் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் இறந்ததால் மாவட்ட நிர்வாகம் முதியோர், குழந்தைகளை தரிசனம் செய்ய வரவேண்டாம் என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தது.

இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சரியான வசதிகளை செய்து கொடுக்காமல் அத்தி வரதரை தரிசிக்க வரவேண்டாம் என சொல்ல இவர்கள் யார் என்று சமூக வலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.

வயதானவர்கள்தான் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் அவர்களை வர வேண்டாம் என இப்படி ஓப்பனாக விளம்பரம் கொடுக்கலாமா என்ற பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் இதை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாக கண்டித்துள்ளார்.

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அத்தி வரதரை தரிசித்து அருள்  பெறவேண்டும் என வருவதை பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த குடும்பங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்   அங்கு நடந்த துயர சம்பவம் வேதனையான ஒன்று. கூட்ட நெரிசல் காரணமாக கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வர வேண்டாம் என்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளம்பரம் கொடுக்கிறார். பக்தர்களை வரவேண்டாம் எனறு சொல்லும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார், உடனே அவர் அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். இது தமிழகத்திற்கு தலைக்குனிவு.  

இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top