Connect with us

கவினை நாமினேட் செய்த சாண்டி!!!

Entertainment

கவினை நாமினேட் செய்த சாண்டி!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் எவிக்ஷன் இல்லாத நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது.

இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும், ஓபன் நாமினேஷன் என்பதால் பதறிப்போயினர். இதில், நாமினேட் செய்வதற்கு காரணமே இல்லை என்றாலும் எதையாவது ஒரு காரணத்தினை சொல்லி நாமினேட் செய்தனர்.

d3a8e17f5d8c74063dd9e1af097f668c-1

முதலாவதாக நாமினேட் செய்ய லாஸ்லியா அழைக்கப்பட்டார், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒருவரை நாமினேட் செய்ய, கவின் எப்போதும்போல, சேரனை நாமினேட் செய்தார்.

அதன்பின்னர் வந்த அனைவரும் கவினையும் லாஸ்லியாவையும் தொடர்ந்து நாமினேட் செய்தனர்.

கவின் தொடர்ந்து நாமினேஷன் செய்யப்பட்டதால் கதறி அழுதார், சாண்டி, “தனது நண்பன் இப்படி இருப்பதை தன்னால் பார்க்க முடியவில்லை, அவர் சிரித்தவாறு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அவர் வெளியே சென்றால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பார். என்னுடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறான், எனக்கு மிகுந்த மன வருத்தமாக உள்ளது. எப்போதும் பாட்டுப் பாடுவது கிண்டலடிப்பது என நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது அவன் தனிமையில் மிகுந்த அளவு கஷ்டப்படுகிறான். அதனால் அவனை நாமினேட் செய்கிறேன்” என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top