Entertainment
தமிழக பாஜக தலைவராகிறாரா ரஜினி
தமிழக பாஜக தலைவராக தமிழிசை செளந்தர்ராஜன் கடந்த 2014 ஆகஸ்டு மாதம் முதல் பொறுப்பில் உள்ளார். இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால். மீடியாக்களில் அதிகம் வலம் வந்தவர். சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுடன் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் இவர்.

பல கட்ட பிரச்சினைகளை தாங்கி தொடர்ந்து பாஜக தலைவராக நீடித்து வந்த தமிழிசை செளந்தராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் வாக்கு வங்கி தமிழ்நாட்டில்3 சதவீதத்தை கூட முழுமையாக எட்ட முடியாத நிலையில் அக்கட்சி வெற்றிக்காக தமிழ்நாட்டில் கடுமையாக போராடி வருகிறது.
இருப்பினும் மக்களை கவர்ந்து இழுக்கும் தலைவர்கள் இல்லை என ஒரு குறைபாடு இக்கட்சியில் உண்டு.
புதிய தலைவராக ஹெச்.ராஜா, குப்புராமு, நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன் என பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் திடீர் என ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் ஏனென்றால் அவரை நியமித்தால்தான் கட்சி செல்வாக்கு பெறும் என்ற வதந்தி தகவல்களும் காற்றில் கலந்து வருகின்றன.
இது வதந்தியா அல்லது பிஜேபி உண்மையிலேயே எடுத்த முடிவா என்பது போக போக தெரிந்து விடும்.
