Entertainment
பிகில் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பை வெளியிட்டார் அர்ச்சனா கல்பாத்தி
கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் தளபதி விஜய் நடிக்கும் பிகில். இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். விஜய் அட்லி கூட்டணியில் இது மூன்றாவது படமாகும்.

படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாட அது செம ஹிட் ஆகியுள்ளது. அப்பாடலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் படத்தின் முழு ஆடியோவும் வரும் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஏஜிஎஸ் குழுமத்தின் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.
