Connect with us

உயிருக்கு துடிதுடித்த சுபஸ்ரீயை காப்பாற்ற போராடும் இளைஞர்கள்: கடைசி நிமிட திக் திக் ….

News

உயிருக்கு துடிதுடித்த சுபஸ்ரீயை காப்பாற்ற போராடும் இளைஞர்கள்: கடைசி நிமிட திக் திக் ….

நேற்று பள்ளிக்கரணை அருகே குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதிமுகவின் பேனர் ஒன்று விழுந்ததது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ கீழே விழுந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுபஸ்ரீ, சில நிமிடங்களில் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சில இளைஞர்கள் சுபஸ்ரீயை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் மிதந்த சுபஸ்ரீ ஒருசில இளைஞர்கள் கையில் தூக்கி கொண்டு செல்கின்றனர். அப்போது பல வாகனங்கள் அவர்களுக்கு உதவிவில்லை. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தும் 15 நிமிடங்கள் வரை வரவில்லை.

அதன்பின்னர் கடைசியாக ஒரு குட்டியானையில் சுபஸ்ரீயை அந்த இளைஞர்கள் ஏற்றுகின்றனர். ஒருவேளை சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சுபஸ்ரீ காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிற்து

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top