Connect with us

கொட்டும் மழையில் ‘பிகில்’ டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!

பொழுதுபோக்கு

கொட்டும் மழையில் ‘பிகில்’ டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!

c947315ef80b489f2598a6def7cbf8cf-2

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் சமீபத்தில் ஆரம்பித்தது

முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த படத்தின் டிக்கெட்களை மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் மட்டுமின்றி திரையரங்குகளிலும் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

தற்போது தமிழகமெங்கும் கனமழை பெய்து வரும் நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர். விஜய் படம் வெளியாகும் தினம் என்றாலே தீபாவளி போல் கொண்டாடப்படும் நிலையில் தீபாவளியன்றெ விஜய் படம் வெளிவருவதால் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top