News
விசா இல்லாமல் இனி மலேசியா செல்லலாம்: இந்தியர்களுக்கு சலுகை

இந்திய சுற்றுப்பயணிகள் இனி விசா இல்லாமல் மலேசியாவுக்கு சென்று அந்நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொண்டு முக்கிய பகுதிகளை சுற்றி பார்க்கலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது
இதுகுறித்து மலேசிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு, அதன் பின்னர் மூன்று மாதங்களுக்குள் மலேசியாவுக்கு சுற்றுலா வரலாம். இதற்கு விசா எதுவும் தேவை இல்லை
மேலும் மலேசியாவில் சுற்றுப்பயணம் இந்தியர்கள் திரும்பிச்செல்ல பயண டிக்கெட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை ஜனவரி 1 முதல் டிசம்பர் 26 வரை அமலில் இருக்குமென்றும் ஒருமுறை மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் வருவோர் 45 நாட்கள் கழித்து மீண்டும் மலேசியாவுக்கு வர முடியும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
