News
புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சீல்
கொரோனா வைரஸின் கொடூர தாண்டவத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், ஊர்வலம், கோவில், சுற்றுலா, இது போல விசயங்களை தவிர்க்குமாறும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மால்கள், மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் வணிக நிறுவனங்களைஅடைக்க சொல்லியும் சென்னையின் பிரதானமான புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் அடைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டதால் அரசு உத்தரவை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
