News
நீதி வென்றுவிட்டது: நிர்பயா தாயார் மகிழ்ச்சியுடன் பேட்டி

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு நிர்பயாஅவின் தாயார் ஆஷாதேவி அவர்கள் செய்தியாளர்கள் பேசியதாவது:
இன்று நீதி கிடைத்து விட்டதாகவும் இந்த நாள் தேசத்தின் அனைத்து மகளுக்கும் சமர்ப்பணம் என்றும் தெரிவித்தார். மேலும் எனது மகள் திரும்பி வரப்போவதில்லை ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்குமான எனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த போராட்டம் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதித்துறைக்கும் அரசுக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்தார் மேலும் இதற்கு நிர்பயாவுக்கு நீதி தாமதமானதே தவிர நீதி மறுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
