வருத்தத்தை அளிக்கும் விசுவின் மரணம்

சிறந்த கதை திரைக்கதையாளர் வசனகர்த்தா இயக்குனர் விசுவின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
80ஸ் 90ஸ் கிட்ஸ்களுக்கு என்றும் மறக்க முடியாத இயக்குனர் இவர். இவரின் மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்கள் ஆகும்.

1c80e61773e25ed0d9cf7e42c86a2c8f-1

இவர் இயக்கிய படங்களில் பாலச்சந்தரின் தயாரிப்பில் கவிதாலயா நிறுவனம் தயாரித்த பெண்மணி அவள் கண்மணி திரைப்படம். மிக சிறந்த திரைப்படம் ஆகும்.

பெண்களுக்காக படம் எடுக்கிறேன் என ஒப்புக்காக எடுக்காமல் தனக்கே உரிய கோணங்கி சேட்டைகளுடனும் விறுவிறுப்பான காமெடி கலந்த திரைக்கதையுடனும் அப்படத்தை இயக்கி இருப்பார் விசு

மகன் பிரதாப்போத்தன் வரும் காட்சிகளும் மருமகள் குட்டி பத்மினி பால் வாங்கிட்டு வர சொன்ன பின்னாடி காலை 6மணிக்கு வீட்டுக்கு போய் பக்கத்து வீட்டில் என்ன பிரச்சினை என அலசி ஆராயும் ரேடியோ மாமாவாக அதகளம் செய்து இருப்பார்.
பயந்தாங்கொள்ளியான பிரதாப்போத்தனிடம் யார்யா இங்கரேடியோ மாமா கூப்டுயா உங்க அப்பன என எம்.என் ராஜம் சொல்லும்போது பயந்து நடுங்கி அப்டியே எனக்கு குளிர் ஜூரம் வரது மாதிரி இருக்குப்பா என ஆக்டிங் கொடுப்பது எல்லாம் விசுவின் வேறு வகை நடிப்பு.
நம்ம வீடு குடும்பம் என்று இருக்க கூடாது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளையும் அண்டை அயலாரின் பிரச்சினைகளையும் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்ற வகையில் அருமையான மெசேஜ் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
இவரின் வேடிக்கை என் வாடிக்கை மற்றொரு அருமையான திரைப்படம் பூர்ணம் விஸ்வநாதனிடம் தியாகி பத்தமடை பட்டாபிராமன் என்று ஒரு டுபாக்கூராக ஒரு பெயரை சொல்லி அவர் வசமாக சிக்கி கொள்ளும் காட்சிகள் எல்லாம் படத்தில் வெடிச்சிரிப்பை வரவைத்தவை.
முதன் முதலில் இன்றைய காரைக்குடி,செட்டிநாடு,கானாடுகாத்தான் உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளை விரிவாக காண்பித்தவர் இவர்தான். படத்தின் பெயர் சிதம்பர ரகசியம். இவரின் குடும்ப படங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது இந்த படம் இதுவும் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது. இதே பாணிகளில் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் காட்சிகளுடன் இவரது கெட்டிமேளம் மற்றும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்கள் இருந்தன. விசுவின் படங்களுக்கு வலதுகரமாக இருந்தவர் அவரது சகோதரர் கிஷ்மு. 90களின் நடுவிலேயே தூர்தர்ஷன் 7மணி செய்திகளில் கிஷ்மு இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு கலக்கமடைந்திருக்கிறேன்.
இவரின் படங்களுக்கு பெரும்பாலும்எம்.எஸ்வி, சங்கர் கணேஷ், போன்றோர்தான் இசையமைத்தனர் 80களில் புகழ்பெற்ற இசைஞானி இளையராஜா இவர் இயக்கிய கெட்டி மேளம் என்ற படத்தில் மட்டுமே பணியாற்றியுள்ளார். இவர் நடித்த படங்கள் இவர் வசனம் எழுதிய படங்களில்தான் இளையராஜா அதிகம் இசையமைத்துள்ளார்.

விசுவின் மரணம் பெரும் பேரிழப்பே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...