காரியத் தடை நீங்க ஆடி அமாவாசை வழிபாடு!

பித்ரு காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக அமாவாசை இருக்கின்றது. நமது இல்லத்தில் மறைந்த முன்னோர்களை ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று அவசியம் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு கொடுக்கும் தண்ணீரும், எள்ளு கலந்த உணவு அவர்களது பசியைத் தீர்க்க உதவும். பித்ருக்களுக்கு நாம் செய்யும் இந்த சிறு உதவியால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்குவார்கள். அந்த மகிழ்ச்சியின் காரணமாக பித்ருக்கள் நமக்கும், நமது வாரிசுகளையும் வாழ்த்தி அருளாசி புரிவார்கள். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை விட ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பலரது இல்லத்தில் தீராத பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். சுப காரியத் தடை, ஆரோக்கியோத்தில் தொல்லை, மேலும் அடுத்தடுத்து பல வித இன்னல்களை சந்திக்க நேரிடும். இதற்கெல்லாம் காரணம் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான். பலரும் இறந்தவர்களின் திதி பற்றிய விவரம் தெரியவில்லை என்று கூறி  அமாவாசை தர்ப்பணம் செய்வதில்லை. அவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளுக்கு, ஆலயங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து, வீட்டில் படையல் போட்டு வழிபட வேண்டும்.

தர்பண வழிபாடு முடிந்தததும் விலங்குகளுக்கு, பறவைகளுக்கு உணவு கொடுக்கலாம். பசு, காக்கை, தெருவில் இருக்கும் நாய்கள், பூனை எதோ ஒரு ஜீவனுக்கு உணவு கொடுக்கலாம். உங்களால் இயன்றால் அன்றைய தினம் அன்னதானம் செய்யலாம். ஊனமுற்றவர், வயதானவர்கள் அல்லது ஏழை-எளியோருக்கு ஒரு வேளை உணவு அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். முக்கியமாக தந்தை  இழந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் ஒவ்வொருவரிடமும் ஆத்ம பலம் அதிகரிக்கும் என்பதால் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.