நல்ல கணவன் அமைய அருளும் மார்கழி நோன்பு

b4c60381a309a27352b30bdeef2114a6

தமிழர் வாழ்வென்பது அகவாழ்வும், புறவாழ்வும் சேர்ந்தே அமைந்தது. எந்த ஒரு பண்டிகையும் தன் நலம் சார்ந்து பொதுநலமும் சேர்ந்தே காரண காரியத்தோடு அமைஞ்சது. இறை பக்தியோடு, வாழ்க்கைமுறையையும், சமூக அக்கறையையும் சார்ந்தே கொண்டாடப்படுது. விநாயகர் சதுர்த்தி அன்று வினாயகரை நீர்நிலைகளில் கலப்பது ஆற்றுப்படுக்கையில் இருக்கும் மணல் ஆவணிக்கு பின் வரும் அடைமழையில் அடிச்சுக்கிட்டு போகாம இருக்க, களிமண்ணால் ஒரு அடுக்கினை உண்டாக்க… பொங்கல் பண்டிகை விவசாயி, விவசாயத்துக்கு உதவும் மாடுகளை சிறப்பிக்க, கார்த்திகை மண்பாண்ட கலைஞர்களை வாழ்விக்க.. தீபாவளி பட்டாசு தொழிலாளர்களை வாழ்விக்க.. இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும் நம்ம கண்ணுக்கு தெரியாமயே சமூகநலன் பொதிந்திருக்கும். அந்த வகையில் பாவை நோன்பு எனப்படும் மார்கழி நோன்பும் அவ்வாறே அமையப்படுது. பாவை நோன்பின் மகத்துவத்தை பார்க்கலாம்.

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த ஆண்டாள், பெருமாள்மீது கொண்ட அதீத பக்தியால், அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள்.
கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த பெருமாள், பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்துக் கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால், விரும்பிய கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை ஆகும். 

ஒரு பெண்ணோட தேவையென்பது மனம் நிறைந்த வாழ்க்கையே!  கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழவேண்டும் என்பதே அவளின் வேண்டுதல்! நல்ல கணவன் அமைந்துவிட்டால் அந்த பெண்ணின் வாழ்வு மட்டுமில்லாம அவளை சார்ந்த அனைவருமே மேம்படுவர். ஒருவேளை, விதிவசத்தால் சரியா அமையலைன்னா?! ஒரு வம்சத்தின் வாழ்க்கையே கேள்விக்குறி.

405c4ff3ae08481c7acee4d7a1f6454b

மார்கழியின் பொதுநலம் எதுவெனில், வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். 

f936a5172969288b2b26d32b9fbe2801

பாவை நோன்பு

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின்போது  விடியு முன்பே எழுழுந்து, ஆற்றில் மார்கழி நீராடி, கரையில் பாவைக்களம் ஒன்றை அமைத்து அதில் ஒரு பாவையை(பெண் உருவம்) ஒன்றை வடிவமைத்து , அந்தப் பாவையை பூக்களால் அலங்கரித்து, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபட்டனர். பின்னர்அருகிலிருக்கும் வைணவர்கள் பெருமாள் கோவிலுக்கும் சைவர்கள் சிவன் சன்னிதிக்கும்  சென்று வருவார்கள்.  பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழிமற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர். நோன்புக்காலத்தில் கன்னிப்பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும்,கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிக்கனும்.

393d84485d093921ada3d589091427e4

திருவெம்பாவை நோன்பு

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்குமுன் தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக்கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடனும். திருவெம்பாவைபாடல்களை கோயில்களில் பாடுவது வழக்கம். சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபெறுவர். இந்நோன்புக்காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.

fa78fc7145e7aafc35f1dbde732c32c4

திருவாதிரை நோன்பு

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆருத்திரர் என்றும் கூறுவர்.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் நடக்கும்  ஆருத்ரா தரிசனத்தை கண்டு ரசிக்கனும். விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் சிவப்புராணம், திருவெம்பாவை ஆகிய நூல்களை பாரயணம் செய்வர்.

4461c2898139c45754b02aaf76a96fe2-1

திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாரகழி மாதம் நாளை ஆரம்பிக்க இருக்கிறது. நல்ல வாழ்க்கை அமையவும், அமைந்த வாழ்க்கை நல்லபடியா இருக்கவும் நோன்பு இருக்கலாம் சகோதரிகளே!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...