டாஸ்மாக் திறப்பு கொடூர போதை- ஒரே நாளில் நிலைகுலைய செய்த கொலைகள்

நேற்று முன் தினம் ஒயின் ஷாப்பை திறந்து விட்டாலும் விட்டார்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்ற அளவு குடிமகன்கள் பல கொடூர கொலைகளை செய்துள்ளனர்.

fd4d792b52f90e346b23ccad1e7914c9

தேனி, பரமக்குடி, நாகப்பட்டினம், கரூர் மாவட்டம் நெரூர் நாகப்பட்டினத்தில் மட்டுமே இரண்டு கொலைகள் என குடிமகன்கள் தங்களது வெறிச்செயலை செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டு கொலையான நபர்களில் பாதிப்பேர் அப்பாவிகளே. மக்கள் கடும் துயருற்று இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்து இது போல கொலைகள் அரங்கேறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம் அருகே 70 வயது முதியவரை அவருக்கு மரவேலை பார்த்து கொடுத்த தச்சர் ஒருவர் குடிபோதையில் சம்பளப்பாக்கிக்காக அவரை கொலை செய்துள்ளார் .

கன்னியாகுமரி அருகே ஒரு வாலிபர் கொடூரமாக குடித்து விட்டு வீட்டு கம்பி கதவில் ஏறி குதிக்கிறேன் என்று முயற்சி செய்ததில் வேல் போன்று மேலே இருந்த கம்பி குத்தி கிழித்ததில் படுகாயம் அடைந்தார். பின்பு அவரை தீயணைப்பு படையினர் மீட்டு ஹைட்ராலிக் மெசின் மூலம் கம்பியை அறுத்து எடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த இருவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நண்பர்கள் இருவருக்கு இடையே போதையில் ஏற்பட்ட தகராறில் உடற்பயிற்சி செய்ய வைத்திருந்த டம்பிள்ஸை எடுத்து அடித்ததில் மற்றொரு நண்பர் பலியானார்

இதுபோல அனேக நிகழ்வுகள் இந்த குடியால் ஒரே நாளில் அரங்கேறியுள்ளன. இது மட்டுமல்லாமல் சாலை மறியல், சாக்கடையில் விழுதல், என குடிகாரர்களின் அட்ராசிட்டிகள் ஒரே நாளில் பெருகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.