இலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்

செல்வத்தின் அதிபதியாக இருக்கும் கடவுள், லட்சுமியின் அனுகிரகம் இருந்தால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

வீட்டில் எப்போதும் இலட்சுமி அனுகிரகம் இருக்க கீழ்க்கண்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

லட்சுமிதேவியின் புகைப்படத்தைக் காட்டிலும் சிலை வைப்பது சிறப்பானது.

அதிலும் குறிப்பாக பாதரச சிலை வைத்தால் வீட்டில் செல்வம் மட்டுமின்றி அமைதியும்கூட நிலவும்.

03e6f44a02b6062d680f832e4c67f2d3

லட்சுமி தேவியை தனியே வைத்து வணங்குவதைக் காட்டிலும், விநாயகர் சிலையின் அருகாமையில் வைத்து வணங்கும்போது கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

லட்சுமி தேவியின் இருக்கை தாமரை மலர் என்பதால், தாமரை மலரால் செய்யப்பட்ட ஜெப மாலையை வீட்டில் வைத்திருப்பது செல்வத்தைப் பெருக்கும்.

வாசலை தினமும் காலை, மாலை இருவேளை பெருக்கி குறிப்பாக கோலமிடுதல் வேண்டும்.

மாலை 6 மணிக்கு விளக்கேற்றி, தாமரைப் பூ வைத்து செவ்வாய், வெள்ளி பூஜை செய்தால் நிச்சயம் இலட்சுமி கடாட்சம் வீட்டில் இருக்கும்.

சங்கில் தண்ணீர் நிரப்பி தெற்கு வாசல் நோக்கி வைத்தால் இலட்சுமி கடாட்சம் நிச்சயம் வீட்டில் இருக்கும்.

ஒற்றைக் கண் தேங்காயை பூஜை அறையில் வைத்திருப்பது இலட்சுமிக்கு மிகவும் உகந்தது.

வாசலில் மாவிலைத் தோரணம் இருந்தால் இலட்சுமி கடாட்சம் வீட்டில் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews