Connect with us

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுரை

தமிழகம்

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுரை


1da1d1a8682dbbf02fec019b322c3728

தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதி பொதுமக்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கேரளா, தமிழகம், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top