அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பல வித தோஷங்களில் அன்னதோஷமும் ஒரு வகையான கடுமையான தோஷமாகும். எது செய்தால் இந்த தோஷம் ஏற்படும் என்பதை விரிவாக காணலாம்.

1bad2ebc696af3831872e06f315699a7-1

சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களுக்கு இந்த தோஷ பாதிப்புகள் உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் பசி என்று கேட்கும் பொழுது உணவளிக்காமல் இருப்பதாலும் இந்த தோஷம் உண்டாகும். பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு ஏதேனும் தராமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பாதிக்கும். உணவு உட்கார்ந்து சாப்பிடும் பொழுது குறை சொல்வது, குத்தி  பேசுவது, கோபத்தை தூண்டுவது, விரட்டிவிடுவது எல்லாம் பாதிப்புகளை உண்டாக்கும்.

சரியாக பிண்டம் கொடுக்காதவர்கள், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் அந்த உணவை குப்பைகளில் கொட்டுவது போன்றவற்றால் அன்னதோஷம் ஏற்படும். அப்படி பட்டவர்களுக்கு எவ்வளவு உழைத்தாலும் செல்வம் கரைந்து கொண்டே இருக்கும். வீட்டில் பணவரவு காட்டிலும் செலவுகள் அதிகமாக ஏற்பட்டு கடன் தொல்லைகளில் சிக்கி கொள்வார்கள். முடிந்தவரை மேலே குறிப்பிட்டதை தவிர்த்து விடுங்கள்.

அன்னதோஷம் விலக எளிய பரிகாரம் :-

வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் அன்னபூரணியை வணங்கி வந்தால் இந்த தோஷத்தில் இருந்து  நிவர்த்தி பெறலாம். முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களால் அன்னதானம் பெரிய அளவில் செய்ய முடியாவிட்டாலும் சிறிய அளவில் ஏதேனும் பழங்கள் கொடுக்கலாம்.

உங்கள் வீட்டின் மொட்டைமாடியில் ஒரு பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம். விலங்குகளுக்கு தண்ணீர் வைக்கலாம். வீட்டிற்கு வரும் கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களை வெறும் கையோடு அனுப்பாமல் அவர்களுக்கு பழங்கள் அல்லது பால் கொடுக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews