பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமா?!


8b0f3c2bea8c52d3e6f229a63b057b91

பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமான்னு கேட்டால் கூடாதுன்னுதான் சொல்வேன். ஏனென்றால்..

பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் கற்பூர (அ) நெய் ஆரத்தியை பெருமாளுக்கு காட்டியவுடன் ஆரத்தியை, கர்பக்கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்துவிடவேண்டும். அதுவே பெருமாள் கோவிலின் ஆகமவிதி. கடவுளின்மீது மனிதனுக்கும், மனிதன்மீது கடவுளுக்கும் நம்பிக்கை இல்லாமல் போனதால் இந்த விதிகள் மீறப்படுது. சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீபாராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள்.

அர்ச்சகர் தீபாராதனையை வெளியில் எடுத்து வந்தாலும், நாம அதை தொட்டு வணங்காமல் இருப்பதே சிறப்பு. பெருமாள் கோவிலை பொருத்தவரை நேரடியாய் பகவானை கண்குளிர கண்டு தரிசிப்பதே முக்கியம். பெருமாள் கோவிலை பொருத்தவரை ஜோதிக்கு முக்கியத்துவமில்லை. துளசியும், சடாரியும்தான் முக்கியம்.

சிவன் ஜோதிரூபங்குறதால சிவன் கோவிலில் தீபாராதனை காட்டுவதும், அதை தொட்டு வணங்குவதும் செய்யலாம்.

எந்த கோவிலுக்கு போகிறோமோ அந்த கோவிலின் நியதியை பின்பற்றனும். அப்பதான் முழுபலனும் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.