நவராத்திரியின் வரலாறு

நவராத்திரி என்பது சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் தீய சக்தியை அழிப்பதற்காக தங்களின் சக்திகளை திரட்டி ஒன்றாக செய்து பெண் வடிவத்தில் தோன்றிய அம்பிகை துர்க்கை. துர்க்கை அம்பிகை மிகவும் ஆக்ரோஷமாக சிங்கத்தின் மீது வீற்றிருப்பவள். பத்து கைகள் கொண்டிருப்பவள்.

     பத்து கைகளிலும் அம்பிகை ஆயுதம் கொண்டிருப்பாள். தீய சக்தியை அழிப்பதற்காக மற்ற கடவுகளின் ஆயுதங்களையும் துர்க்கை பத்து கைகளிலும் கொண்டிருப்பாள்.

e3b6f15549c9d50232626734aef033fa

     மற்ற தெய்வங்கள் தங்களின் ஆயுதங்களையும் சக்தியையும் கொடுத்துவிட்டு பொம்மைப் போல் காட்சி அளிப்பதை விளக்கும் விதமாக கொலு அமைப்பட்டு வருகிறது. கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் மண்ணால் செய்யப்பட்டிருப்பது மேலும் கொலுவிற்கு சிறப்பைத் தருகிறது.

     நவராத்திரியின் போது பல வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவார்கள். ஒரு பெரிய மேடை அமைத்து அதில் படிகட்டுகள் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு படிகளிலும் புராணக்கதைகளுக்கு ஏற்ப பொம்மைகள் படிகட்டிகளில் அடுக்கப்பட்டிருக்கும் மற்றும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கொலுவில் முக்கியப் பங்கு பெண்களுக்கானது ஆகும். நவராத்திரி தினங்களில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்து அம்பிகையின் அருள் பெறுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews