கொல்லிப்பாவை அம்மன் – நவராத்திரி ஸ்பெஷல்

அம்பிகை வழிபாட்டுக்கு முதன்மையான விஷயமாக புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழா சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதம் அதற்கு பிறகு 10 நாட்களும் பூஜை புனஸ்காரம் என்று அமர்க்களப்படுவது இந்த நவராத்திரி நேரத்தில்தான் அதனால் நாம் ஒவ்வொரு அம்பிகையின் சக்தியையும் இப்பகுதியில் விடாமல் பார்த்து வருகிறோம்.

c6fcffdabb38727fde7bc5a6ebe489d6

இன்று கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை அம்மனை பற்றி. இந்த அம்மன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சிதருவதால் எட்டுக்கையம்மன் என்றும் அழைக்கின்றனர். பூஞ்சோலை என்ற கிராமத்தில் இருந்து இக்கோவிலுக்கு நடைபயணமாக இக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.

கொல்லிமலை சித்தர்களின் தலைமையிடம் என்றும் இங்கு இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். பல சித்தர்கள் இன்னும் சூட்சுமமாக இந்த கொல்லிமலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொல்லிமலையை பல ஆண்டுகளாக காக்கும் காவல் தெய்வமாக கொல்லிப்பாவை அருள்புரிகிறாள்.

கொல்லிமலையில் தேவர்களும், மகரிசிகளும் தவமிருந்த போது அசுரர்களால் துன்பம் நேரிட்டதாகவும், அதை தடுக்க தேவரான விஸ்வகர்மா ஒரு பெண் சிலையை செய்தார். அதற்கு உயிர் கொடுத்த தேவர்கள், அந்தப் பெண்ணின் வசீகரித்தில் மயங்கி வருகின்ற போது அரக்கர்களை இந்த அம்பிகை எட்டுக்கைகளை கொண்டு கொன்றாள் என்ற அடிப்படையில் உருவானது இக்கோவில்.

நவராத்திரி நாளில் இந்த கோவில் சென்று வழிபட்டு வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.