நவராத்திரி திருவிழா – வளங்களை வாரித்தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு

அம்பிகைக்கு உரியது ஸ்ரீசக்ரம் . ஸ்ரீசக்ரம் உள்ள கோவில்கள் ஏராளமாக இந்தியாவில் இருக்கிறது. அம்பிகை வழிபாடுதான் ஸ்ரீ சக்ர வழிபாடு.

5eecb17c63802cead66f1ed213dc4fff

ஸ்ரீ சக்ரத்தை பூஜையறையில் வைத்து மிக சுத்தமாக இருந்து பயபக்தியோடு அதற்கு தினமும் மலரிட்டு, அம்பிகைக்குரிய மந்திரங்களை உச்சரித்து அதன் முன்னே விளக்கு ஏற்றி, ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற தூபங்கள் காட்டி வணங்கினால் அனைத்தும் சிறக்கும் என்பது நம்பிக்கை.

இந்த வழிபாட்டை தினம் தோறும் மனம் தளராமல் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சக்கரத்தை தினமும் வழிபாடு செய்யும்போது அனைத்து தெய்வங்களும் ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமைகளை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை கூறுகின்றன.

காஞ்சி காமாட்சி கோயில், திருப்போருர் முருகன் கோவில் போன்ற இடங்களில் கோவில்களில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்ரம் உண்டு.

ஸ்ரீ சக்ரம் கடைகளில் கிடைக்கும் உலோகங்களில் இருக்கும் ஸ்ரீ சக்ரமே வழிபட சிறந்தது. பிளாஸ்டிக், மற்றும் புகைப்படங்களாக இருக்கும் ஸ்ரீ சக்ரம் வழிபட ஏற்றதல்ல.

அம்பிகையின் அனைத்து ஸ்வரூபங்களும் ஸ்ரீ சக்ரத்தில் இருப்பதாக நம்பிக்கை தொடர்ந்து ஸ்ரீ சக்ரபூஜை செய்தால் வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.