களை கட்ட வரும் நவராத்திரி திருவிழா

நவராத்திரி பண்டிகைக்கென்று ஒரு சிறப்பு உண்டு. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பான அம்மன் வழிபாடுகளை பெண்கள் செய்வதுதான் இதற்கு காரணம். நவராத்திரிக்கென்று நியம நிஷ்டைகளுடன் அம்பிகையை நினைத்து வழிபட்டால் வாழ்வில் காணாத வளம் யாவும் வந்து சேரும். இல்லம் சுபிட்ஷமாகும் என்பது நம்பிக்கை.

83273205d340c4d798304cf1e241ab61-1

பல இடங்களில் பெண்கள் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள் அதற்கு தினமும் ஏதாவது சுண்டல் அல்லது பொங்கல் என ஏதாவது தினமும் நிவேதனம் செய்வார்கள்.

அம்பிகையை பத்து நாளும் வேறு வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபடுவர். 9ம் நாள் சரஸ்வதி தேவியாக வழிபடுகின்றனர்.

பத்தாம் நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அம்பிகையின் அருளால் அனைத்தும் சிறக்கும் குழந்தை நன்றாக படிக்கும் என்பது நம்பிக்கை.

அம்பிகைக்கு உரிய சக்தி பீடங்கள், காஞ்சி காமாட்சியம்மன், மதுரை மீனாட்சியம்மன், கோவில்கள் உட்பட இந்தியா முழுவதும் அம்மன் கோவில்கள், பெருங்கோவில்கள், சிறுகோவில்கள் அனைத்திலும் இந்த நவராத்திரி விழா களைகட்டும்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

அனைத்து தடைகளையும் விலக்கி வாழ்வில் சுபிட்சத்தை கொடுக்கும் இந்த அம்பிகை வழிபாட்டை நாமும் செய்து பயன்பெறுவோம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews