நவராத்திரி-உங்களுக்காக மட்டும் இல்லாமல் உலகத்துக்காகவும் அன்னையிடம் வேண்டுங்கள்

நவராத்திரி எட்டாம் நாள் இன்று தினம் தோறும் இவ்வுலகை காக்கும் அன்னையான அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, துர்கா, வராஹி என பல ரூபங்களில் வணங்கி வருகிறோம்

24401d43cf688041e15258dfb9b82cf9

தினமும் பூஜைகள் செய்கிறோம் வணங்குகிறோம் கொலு வைத்து சுண்டல் வைத்து அம்பிகைக்கு படைக்கிறோம். நாம் வேண்டும் வரங்களை கேட்கிறோம் பெரும்பாலும் நமது சொந்த கோரிக்கைகளையே அம்பிகையிடம் வைக்கிறோம்.

அப்படி இல்லாமல் இந்த உலகத்துக்காகவும் சகல ஜீவராசிகளுக்காகவும் அன்னையிடம் பிரார்த்தித்து கொள்வது சிறப்பு. ஏனென்றால் இது போல நவராத்திரி காலங்கள் அன்னையை வழிபட ஏற்ற மங்களகரமான காலங்கள் ஆகும்.

இக்காலத்தில் செய்யப்படும் வழிபாடுகள் நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

அதனால் உங்களுக்காக மட்டும் அல்லாமல் இவ்வுலகத்தை காக்கும் தேவியான அன்னையிடம் உலக நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் இவ்வுலகம் முன்பு போல் இல்லை அதர்மங்களும் , அநீதிகளும் பெருகி மக்கள் தவித்து வருகின்றனர்.

ஐந்தறிவு ஜீவன்கள் பல வாழ வழியின்றி துன்பத்தில் தவிக்கின்றன.

அதர்மத்தை அழிக்கும் அம்பிகையை விஜயதசமியன்று வழிபடுங்கள். கூட்டுப்பிரார்த்தனையாக அன்னையிடம் உலக நன்மைக்காகவும் அநீதிக்கு எதிரான விஷயங்களுக்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

அசுரனை அழித்தது போல் துர்கா தேவி அநீதியை இதன் மூலம் அழிப்பாள். ஏனென்றால் கூட்டு பிரார்த்தனை மிக மகத்தானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.