இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்கள் புத்தகங்களை நோட்டுகளை பூஜையறையில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சரஸ்வதிக்கு உரிய பூஜைகள், சுண்டல், பொங்கல், பலகாரங்கள் செய்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

c7f09540dd2da525b29ee8256b08b331

அதே போல் தனக்கு பயன் கொடுக்கும் ஆயுதத்திற்கு உழைப்பாளிகள் அனைவரும் இதே போல் பொட்டிட்டு பூவிட்டும் சுவாமி வழிபாடு மரியாதை செய்வது இந்த நாளில் தான்.

நவராத்திரி 9 நாளும் சுவாமி வழிபடாதவர்கள் இந்த ஒரு நாளிலாவது மிக சிறந்த முறையில் அம்பிகையை வழிபட்டால் உங்களிடம் சுபிட்ஷம் சேரும் , ஞானம், கல்வி, வீரம் ஆகிய அனைத்தும் சேரும்.

ஆகவே இன்று உரிய பூஜைகள் செய்து கல்விக்காகவும், உங்கள் தொழிலுக்காகவும் ஆயுதங்கள், புத்தகங்களை வைத்துபூஜை செய்யுங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.