இயற்கை எழில் மலையில் காட்சி தரும் அழகிய நம்பி பெருமாள்

108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று திருக்குறுங்குடி. இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டது இந்த கோவில். திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள்.

78dcbcc7ded44499a8fc1d81db1f5ebf

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகில் இக்கோவில் உள்ளது . மலை மீது இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், மரங்கள் என ஊட்டி கொடைக்கானல் செல்வது போல இந்த மலைப்பாதை அருமையாக உள்ளது.

இந்த குளு குளு பிரதேசத்தில்தான் இந்த கோவில் உள்ளது. இங்கு மூலவராக காட்சி தருகிறார் நம்பிராயர். அருகிலேயே தாயார் சன்னதி உள்ளது.

இங்குள்ள மற்றொரு சிறப்பு சிவனுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளது வெளியே பைரவருக்கு சன்னிதியும் உள்ளது சிறப்பு. இதை வைணவ கோவில்களில் அதிகம் பார்க்க முடியாது. 108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலிலும் இது போல தனி சிவன் சன்னதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலின் முக்கிய சிறப்பு என்னவென்றால்

ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மலை என்று கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எழில் சூழ உள்ள இந்த கோவில் சென்று மலை மேல் காட்சி தரும் அழகிய நம்பிராயரை தரிசித்து வாருங்கள் உங்கள் வாழ்வு பொன்னாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.