Tamil Nadu
ரேஷன் கடை விடுமுறையில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் வார விடுமுறை வெள்ளி கிழமை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் வரும் வெள்ளி அதாவது ஜனவரி 10ம் தேதி வரும் வெள்ளியன்று தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது
வரும் 15ஆம் தேதி தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அளித்து வருகிறது
உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வரும் வெள்ளியன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும், அன்றைய தினம் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது
ரேஷன் கடைகளுக்கு வரும் பத்தாம் தேதி விடுமுறை இல்லை என்பதற்கு பதிலாக வரும் 16ம் தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
