சிவராத்திரி விரதமிருப்போர் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

038e4e2f96ea73893b1bc6d7b2cae942

மகாசிவராத்திரியான இன்று எல்லாரும் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான உடைகளை உடுத்தி,  நெற்றியிலே நீறுப்பூசி, வணங்கிவிட்டு அவரவர் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள். கடமையை செவ்வனே செய்வதும் இறைப்பணிக்கு ஒப்பானதே!.  முடிந்தவர்கள் உபவாசம் எனப்படும் உண்ணா நோன்பு இருக்கலாம். முடியாதவங்க பால், பழம் சாப்பிட்டும், சாப்பிட்டே ஆகனும்ன்னு உடல்நிலை இருக்கின்றவர்கள் ஒருவேளை அரிசி உணவினை சாப்பிட்டு மனதுக்குள் இறை நினைவோடு கடமையை செய்யுங்க.

மாலையில் வீடு திரும்பியதும் வீட்டில் பால், தயிர், நெய், தேன் இவற்றினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு நறுமண மலர்களாலும். வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப தீப நைவேத்யங்கள் செய்து, ‘நமசிவாய என்ற ஐந்தெழுத்தை, எத்தனைமுறைக்கு சொல்லமுடியுமோ அத்தனை முறை  நமச்சிவாய மந்திரத்தை உருப்போடுங்க. ஒப்புக்கு சொல்லாமல் மனமொன்றி சிலமுறை சொன்னாலும் நன்மை பயக்கும். வீட்டில் அபிஷேகம் செய்யும் வழக்கமில்லாதவங்க, கோவில்களில் நடைப்பெறும் அபிஷேகத்துக்கு பால், தயிர், தேன், கரும்புச்சாறு என கொடுக்கலாம். 

சிவராத்தியான இன்று கண்விழித்து உறங்காமல் இருப்பது நலம். முடியாதவர்கள் லிங்கோத்பற்வ காலமான 12 டூ 3 மணிவரையாவது விழித்திருந்து இறைநாமத்தை சொல்லி ஜெபிக்கவேண்டும். 

af3627afebc5b1b1ea57ec88ec24d222

சிவபெருமானின் திருப்பாதத்திலே ‘ந’ என்ற எழுத்தும்.திருவுந்திக் கமலத்திலே ‘ம’என்ற எழுத்தும். திருத்தோள்கள் இரண்டிலும் ‘சி’ என்ற எழுத்தும். திருவதனத்திலே ‘வா’ என்ற அட்சரமும். கடை முடியிலே ‘ய’ என்ற எழுத்தும் உள்ளன என்பது சிவபுராணம் சொல்லும். சிவபெருமானின் திருத்தோற்றமே ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகக் காட்சி தருகின்றது. எனவே, ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்! என்ற பஞ்சாட்சரத்தினை இன்று மனசுக்குள் உச்சரித்தபடியே இருக்க வேண்டும்.

அதனோடு..

ஸெளராஷ்ட்ரே சோமநாதம் ச
ஸ்ரீசைலே மல்லிகார்ஜூனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம்
ஓம்காரம் அமலேச்வரம்

பரல்யாம் வைத்ய நாதம் ச
டாகின்யாம் பீம சங்கரம்
சேது பந்தேது ராமேசம்
நாகேசம் தாருகாவனே
வாரணஸ்யாம் து விச்வேசம்
திரியம்பகம் கௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம்
குச்மேசம் ச சிவாலயே’ என்ற திருமந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

இதன் பொருள் இந்தியாவில் மொத்தம் பன்னிரு ஜோதிலிங்கத் தலங்கள் உள்ளன. சோமநாதர், மல்லிகார்ஜூனேசுவரர், மகாகாலேசுவரர், ஓம்காரேசுவரர் வைத்யநாதர், பீமசங்கரர், ராமேசுவரர், நாகேசுவரர், விஸ்வநாதர், திரியம்பகேசுவரர், கேதாரேசுவரர், குஷ்மேசர் ஆகியன இந்தப்பன்னிரு ஜோதி லிங்கங்களின் திருநாமங்களாகும்.

இதைதான் இந்த மந்திரம் சொல்லுது. இந்த துதியை அன்றாடம் சொல்பவர்களுக்கு ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் நீங்கும். குறைந்தபட்சம் சிவராத்திரி அன்றாவது இத் துதியை அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.

ஓம் நமச்சிவாய! சிவாய நமஓம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.