ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்: அசத்திய ஆஸ்திரேலியா வீரர்

dcb237fbc21cb4afb470f386ad7503d3

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் இளம் வீரர் ஒருவர் ஒரு ஓவரின் ஆறு பந்துகளில் 6 சிக்ஸ் விளாசி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நேற்று ஒரு போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ கிரிக்கெட் அணி – நார்தர்ன் டெர்ரிடோரி அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ கிரிக்கெட் அணி 40வது ஓவரை சந்தித்தபோது ஆஃப் ஸ்பின்னர் ஜேக் ஜேம்ஸ் வீசிய 6 பந்துகளையும் ஆறு சிக்ஸர்களாக மாற்றினார் டேவிஸ் என்ற பேட்ஸ்மேன். இந்த ஆறு சிக்ஸர்களும் ஒரே திசையில் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் டேவிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment