
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஆனால் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இன்றைய நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
விராத் கோஹ்லி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக ராகுல் 2 ரன்களிலும், முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும் புஜாரே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.