Connect with us

பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்

ஆன்மீகம்

பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்

உலகம் முழுவதும் பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத்தமிழ்க்கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் முக்கிய சக்தியாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

4fdfc57dfe7d71f0365f34217bd471d1

முருகனின் ஆலயங்களான பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களில் பங்குனி உத்திர திருவிழா விசேசமாக கொண்டாடப்படும். இவ்வருடம் கொரோனா வைரஸ் 21 நாள் லாக் டவுனில் அந்த விழாக்கள் எல்லாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிகழ்வு எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இது உலகுக்கு மிகவும் துர்பாக்கியமான காலமாகும். இராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் வழி விடு முருகன் கோவில் என்ற கோவில் உள்ளது. இங்குதான் சாயா என்ற மரம் ஸ்தல் விருட்சமாக உள்ளது. சனீஸ்வரனின் தாயாக கருதப்படும் இந்த மரம் ஸ்தல விருட்சமாக இந்தியாவில் வேறு எங்கும் இல்லை இலங்கையில் உள்ள முருகன் கோவிலில்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்தக்காலத்தில் இந்த இடத்தில் மாவட்ட செசன்ஸ் கோர்ட் இருந்துள்ளது கோர்ட்டுக்கு செல்பவர்கள் இந்த மரத்தின் அருகிலுள்ள வேலை வணங்கி கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்ற ஒருவர் முருகன் மேல் கொண்ட பக்தியால் கட்டிய கோவில் இது. இங்கு மூலஸ்தானத்தில் விநாயகரும் முருகனும் இருக்கின்றனர் வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. அதே போல் பங்குனி உத்திர திருவிழாவும் மிக சிறப்பாக இங்கு கொண்டாடப்படும். இராமநாதபுரம் நகர்வாசிகளுக்கு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை எல்லாம் பிறகுதான் அவர்களுக்கு பங்குனி உத்திரம்தான் முக்கிய பண்டிகை. அந்த அளவுக்கு இந்த விழாவை சிறப்பாக செய்வார்கள். பல ஆயிரக்கணக்கில் காவடிகளும் இந்த பங்குனி உத்திர விழாவுக்கு வருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி.

வரலாற்றில் முதல்முறையாக எத்தனையோ நூறாண்டுகளாக நடந்து வரும் இந்த விழா தடைபட்டுள்ளதை எண்ணி பக்தர்கள் கலங்கியுள்ளனர்.

எப்படி இருப்பினும் கோவிட் 19 என்ற கொடிய வைரஸை முருகன் தன் வேல் கொண்டு அழித்து அடுத்த வருடமாவது சிறப்பாக பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக நடந்தேற செய்வார் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. பல நூற்றாண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழா இந்த வருடம் தடைபட்டுள்ளதை திருஷ்டி பரிகாரம் போல எடுத்துக்கொள்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top